இந்தியாவையும் மலேசியாவையும் நெருக்கமாக்கும் பாலமாக மலேசிய இந்தியர்கள்! - மோடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 28: பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் மலேசியாவுக்கு இந்திய பிரதமர் மோடி வருகை தரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மலேசியா வரும் மோடி முன்னதாக மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தினரைச் சந்திந்து உரை நிகழ்த்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் குறித்து  தாம் பெருமைப்படுவதாக இந்தியாவின் புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியான மான் கீ பாத் நிகழ்ச்சியில் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்தியாவையும் மலேசியாவையும் நெருக்கமாக்கும் பாலமாக  மலேசிய இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறினார். எனவே மலேசிய இந்தியர்களின் அர்ப்பணிப்பையும், கலச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாக்கும் மாண்பையும் பாராட்டும் வகையிலும், மலேசியாவுடன் நட்பைப் பலப்படுத்தவும் மோடியின் இந்த வருகை அமையவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி தொடக்கத்தில் மோடி மலேசியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார் என தூதரக வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

இந்தப் பயணம் ஆசியான் கட்டமைப்புகளுக்குள் பலதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட உயர் மட்ட இராஜதந்திர ஈடுபாடுகளுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற 22வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது மோடி கடைசியாக மலேசியாவுடன் கலந்துரையாடினார், அதில் அவர் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டார்.

ஆசியான்-இந்தியா விரிவான கூட்டாண்மை மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை  அதில் உறுதிப்படுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *