கட்சித் தாவிய ரஃபிஸி & நிக் நஸ்மி! RM 10 மில்லியன் செலுத்த வேண்டுமா?! PKR சட்ட ஆலோசனை!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, மே 18: டத்தோ ஸ்ரீ  ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மத் ஆகியோர் தங்களது நாடாளுமன்றப் பதவிகளைத் துறந்து கட்சியிலிருந்து விலகிய பின்னர், அவர்களால் கையெழுத்திடப்பட்ட RM10 மில்லியன் பிணைப்பத்திரத்தை அமல்படுத்துவது குறித்து PKR கட்சி சட்ட ஆலோசனை பெறவுள்ளது.

ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மி ஆகியோர் தங்களது பதவிகளைத் துறப்பதற்கு முன்பு பெர்சாமா கட்சியில் இணைந்ததற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகக் கூறி, அவர்கள் அந்தப் பிணைப்பத்திரத்தால் கட்டுப்பட்டிருப்பதாக கட்சி நம்புவதாக PKR பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் ஃபுசியா சல்லே தெரிவித்தார்.

பெர்சாமாவின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கூற்று அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

முன்னாள் PKR துணைத் தலைவரும், உதவித் தலைவரும் முறையே பண்டான் மற்றும் சித்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் செயலில் இருக்கும்போதே மற்றொரு கட்சியில் இணைந்துள்ளதாக ஃபுசியா கூறினார்.

இந்நிலையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் பொருந்தாது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் மற்றொரு கட்சியில் சேர்ந்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் இணையதளத்தில் நேற்று, 17ஆம் தேதி தேதியிட்ட நேரமுத்திரை உள்ளது என்றும் அவர் கூறினார்.

கட்சியின் அரசியலமைப்பைப் பின்பற்றினால், அவர்கள்  தங்கள் இடங்களைக் காலி செய்வதற்கு முன்பே, 17ஆம் தேதி கட்சித் தாவியுள்ளனர் என்று ஃபுசியா தெரிவித்தார்.

எந்தவொரு சட்ட நடவடிக்கை குறித்தும் முடிவெடுப்பதற்கு முன்பு, PKR தனது சட்டக் குழுவுடன் கலந்தாலோசித்து வருவதாக ஃபுசியா கூறினார்.

நாளை நடைபெறும் PKR அரசியல் செயற்குழு கூட்டத்தில், இந்த இருவரின் விலகல் குறித்தும் கட்சி விவாதிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதனிடையே PKR-ஐ விட்டு வெளியேறுவதற்கு முன்பே தாங்கள் தங்கள் இடங்களைக் காலி செய்துவிட்டதால், தானும் நிக் நஸ்மியும் அந்தப் பிணைப்பால் கட்டுப்படவில்லை என்று ரஃபிஸி கூறியுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *