அயலகத் தமிழர் மாநாடு! ஓம்ஸ் பா. தியாகராஜன் கலந்துகொண்டார்

top-news
FREE WEBSITE AD

சென்னை,  ஜன12: தமிழகத்தில் அயலகத்  தமிழர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை  மிகச்சிறப்பாகத் தொடங்கியது.

இதில் பங்கு கொள்ளவும் தங்களின் தொப்புள் கொடி உறவை புதுப்பிக்கவும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பேராளர்கள் சென்னைக்கு வருகைதந்துள்ளனர். இன்றும் அம்மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.

மலேசியாவில் இருந்து மட்டும் 500க்கும் மேற்பட்ட பேராளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் இருந்து ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பாதியாகராஜன் உட்பட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ஓம்ஸ் தியாகராஜன் அங்குள்ள சில முக்கியத் தலைவர்களைச் சந்தித்து உரையாடினார்.

நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் மையப்பகுதி மாநிலமான சிலாங்கூர், ஜோகூர், நெகரி செம்பிலான், மலாக்கா, பகாங், பினாங்கு, பேராக் கெடா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையில் குவிந்துள்ளனர்.

மத்தியமாநில அரசுகளின் பிரதிநிதிகள்,
அரசியல்சமூக இயக்கங்களின் தலைவர்கள் பொறுப்பாளர்கள் ஆகியோர் இதில் பேராளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த பேராளர்கள் அனைவருக்கும் தமிழக அரசு ஏற்பாட்டில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; தொடர்ந்து அனைத்து பேராளர்களுக்குமான வழிகாட்டலும் உபசரிப்பும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது

மு. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றபின் தொடர்ந்து நான்காவது முறையாக இந்த அயலகத் தமிழர் மாநாடு நடைபெறுவதன் தொடர்பில் புத்தகக் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியப் பேராளர்களும் இந்த கண்காட்சியில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதுடன் அரிய நூல்களையும் வாங்கி சேமிக்கின்றனர்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *