தோல்வியில் முடிந்த பிரதமரின் பதவிக் காலம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 3:  பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சம் 10 ஆண்டுகளாக வரையறுக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்காததால்  நிறைவேற்றப்படவில்லைபக்காத்தான் ஹராப்பான் வட்டாரத் தகவலின்படி, அரசுக் கூட்டணியில் சேர்ந்த எட்டு எம்பிக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இவர்களில் முன்னாள் கூட்டரசு அமைச்சர்கள் இருவரும் அடங்குவர் என்று தெரிகிறது.

  • Hishammuddin Hussein (செம்ப்ரோங்) – முன்னாள் உள்துறை அமைச்சர்
  • M Saravanan (தாப்பா) – முன்னாள் மனிதவள அமைச்சர்
  • Larry Sng (ஜுலாவ்)
  • Syed Abu Hussin Hafiz Syed Abdul Fasal (புக்கிட் காந்தாங்)
  • Henry Sum Agong (லாவாஸ்)
  • Suhaimi Nasir (லிபரான்)
  • Riduan Rubin (தெனோம்)
  • Jeffrey Kitingan (கெனிங்காவ்) – முன்னாள் சபா துணை முதல்வர் ஆகியோர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பில் 146 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 44 பேர் விலகினர்; 32 பேர் வரவில்லை. அரசியலமைப்பு திருத்தத்திற்கு குறைந்தபட்சம் 148 வாக்குகள் (மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை) தேவைப்பட்டது.

வாக்கெடுப்புக்குப் பிறகு வெளியிட்ட பேஸ்புக் பதிவில், துணை சபாநாயகற்ற்  Alice Lau , அரசுக் கூட்டணியில் சேர்ந்த எட்டு எம்பிக்கள் வரவில்லை என்று குறிப்பிட்டார். “பக்காத்தான் ஹராப்பான் சார்பிலுள்ள அனைத்து எம்பிக்களும் கலந்து கொண்டு மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றார்.

அதேபோல், டிஏபி பொதுச் செயலாளரும் சிரம்பான் எம்பியுமான Loke Siew Fook, தமது கட்சியைச் சேர்ந்த 40 எம்பிக்களும் மசோதாவுக்கு ஆதரவாக கலந்து கொண்டதாகந்த் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *