மோடி வரும் நேரத்தில் ஜம்ரியின் சதி! - ஜம்ரி எனும் குப்பை!
- Shan Siva
- 01 Feb, 2026
கிள்ளான், பிப் 1: ‘கோயில் ஹராம்’ இப்போது இதுதான் நாட்டின் தலையாயப் பிரச்னையாக இருக்கிறது ஒரு சில கோமாளிகளுக்கு.
கோயிலை இடிக்கப் பணம்
வசூலிக்கும் அளவுக்கு முற்றிப் போய்விட்டது பைத்தியத் தனம்.
அதற்கும் மேல் கோயிலை
இடிப்பதற்காக பணத்தையும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் சில மார்க்கம் மதியா
கோளாறுகள்.
இந்த லட்சணத்தில் திடீர்
திடீரென்று கூவும் ஜம்ரி வினோத் இப்போதும் கூவியிருக்கிறார் கோயில் ஹராம் பற்றி.
பாவம் கொஞ்ச நாள் பேசுவதற்கு
சேதி இல்லாமல் இருந்தவர், இப்போது கோயில்
ஹராமைக் கையில் எடுத்து, நானும் இருக்கிறேன் என விளம்பரம்
செய்ய வந்துவிட்டார்.
மதம் என்பது ஒவ்வொருவருக்காமன
தனிப்பட்ட நம்பிக்கை. தங்கள் வாழ்வைச் செம்மையாக்க இறை நம்பிக்கையை ஆதாரமாகக்
கொண்டு மறைகள் சொன்ன நீதியின் படி வாழும் பண்பாட்டின் தொடர்ச்சி.
இது நீ பெரியவன் நான் பெரியவன்
என்பதல்ல. அவரவர் ஏற்றுக்கொண்ட கொள்கையின்படி அவரவரர் கைபிடிக்கிறோம். இதில்
யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை.
ஆனால், மிகவும் உணர்வோடு ஒன்றரக் கலந்த மத விவகாரத்தில் சர்ச்சையைக்
கிளப்பி இவர்கள் குளிர்காய்வதுதான் வேதனையாக உள்ளது. இது எத்தனை பெரிய பேராபத்து
என்பதை உணராமல் இந்தக் கோமாளிகளின் நடவடிக்கைகளை காவல்துறையும் அரசும் வேடிக்கைப்
பார்ப்பதும் வருத்தத்திற்குரிய விஷயம்தான் என ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன்
தெரிவித்துள்ளார்.
அதிலும் ஜம்ரி வினோத் போன்ற
குள்ளநரிகள் அவ்வப்போது அவிழ்த்துவிடும் சர்ச்சை கருத்துகள், தேவையில்லாத தலைவலியாய் நாட்டுக்கே துரோகம் செய்கிறது.
ஒரு வீடியோவில் கோயில் ஹராம்
குறித்துப் பேசும் இந்த ஜம்ரி, நம்மைக்
குப்பைகள் என்றும், ஏதோ பாவப்பட்டு விட்டு
வைத்திருப்பதாகவும் எள்ளி நகையாடியுள்ளான்.
நாம் குப்பைகள் போல எல்லா
இடத்தையும் கோயில்கள் கட்டி அபகரிக்கிறோமாம். கோயில் ஹராம் என்று அப்படித்தான்
அழைப்பார்களாம்.
இப்படி மட்டம் தட்டிப்
பேசியிருக்கிறான் இந்த ஜம்ரி.
இந்து மதத்தில் பிறந்து
பிழைப்புக்காக மார்க்கம் மாறி சாயம் போன இந்த நரி நம்மை பாவப்பட்டு விட்டு
வைத்திருக்கிறதாம்.
முதலில் ஜம்ரி தான் யார் என்பதை
உணர வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் நினைவூட்டினார்.
ஒரு இந்து தகப்பனுக்குப்
பிறந்து பின்னர் பலமதம் கண்ட தாயாரின் வழியில் பிழைப்புக்காக மதம் மாறி, ,
ஏதாவது அஞ்சு பத்து கிடைக்காதா என தன்னை
ஒரு மலாய்காரனாகவே கற்பனை செய்துகொண்டு இந்துக்களை அவமானப்படுத்துவதே பிழைப்பாய்
இருப்பவன் இந்த ஜம்ரி. காரணம் நான் முஸ்லிம்தான் நம்புங்க என,, தன்னை நம்ப வைக்க அவ்வப்போது மலாய் விசுவாசம்,
மார்க்க விசுவாசம் எனப் போலியாய் பேசி வைரலாகும் ஜென்மம் இது..
அந்த வகையில் இப்போது இவர்
கோயில் ஹராமைக் கையில் எடுத்திருப்பது...
சுய விளம்பரத்துக்காக மட்டுமல்ல, தன் குருநாதர் ஜாஹிர் நாயக்கை குளிர்ச்சிப் படுத்துவதற்காகத்தான் என
ஓம்ஸ் பா.தியாகராஜன் விளக்கினார்.
பாரத பிரதமர் மோடி இன்னும் சில
தினங்களில் மலேசியா வரவுள்ளார். அதிலும் குறிப்பாக நமது மலேசிய இந்தியர்களை
சந்தித்து உரையாற்றவும் இருக்கிறார். இந்த நேரத்தில் மோடியின் வருகை மீதான கவனத்தை
திசை திருப்ப, மோடியின் வருகைக்கு இடையூறு
செய்ய இந்த ஜம்ரி போடும் திட்டம்தான் இந்த கோயில் ஹராம்.
ஜம்ரியின் குரு ஜாஹிர் நாயக்
இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளி. எனவே ஜாஹிர் நாயக்கை ஆதரிக்கும்
மலேசியாவுக்கு மோடி வருவது, ஜாஹிருக்குப்
பெருத்த அவமானமே. இதனைக் கருத்தில் கொண்டு தன் குருநாதரைக் குளிர்விக்க. கோயில்
ஹராம் எனும் சர்ச்சையைக் கொளுத்திப்போட்டு அதை வைரலாக்கி தந்திரம் செய்கிறது இந்த
நரி.
அதோடு இந்தியர்கள் என்றால் சர்ச்சைக்குரியவர்கள்தான், இந்துக்கள் என்றால் இப்படித்தான் என்ற பிம்பத்தை மோடியின்
வருகையின் போது கட்டமைக்கும் ஒரு சதிச்செயல் இது.
எனவே, ‘கோயில் ஹராம்’
என்ற பேச்சுக்கு நாடு முழுக்க கண்டனம் வலுத்து வருகிறது. எண்ணற்ற புகார்கள் நாடு
தழுவிய அளவில் காவல்துறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
3 ஆர் விவகாரம் குறித்து பேசுவது, எழுதுவது, பதிவிடுவது குற்றம் என்று
தெரிந்தும், இன்னொரு மதத்தை புண்படுத்தும் இது போன்ற
ஜென்மங்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை மேற்கொள்வதுதான் சரியான தீர்வாக
அமையும். ஆனால், காவல்துறை
இதுபோன்ற விஷயங்களில் தீவிரம் காட்டுவதில்லை. அது இந்திரா காந்தி விஷயமாக
இருந்தாலும், சரி ஜம்ரி விவகாரமாக இருந்தாலும் சரி. அது ஏன்
என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என ஓம்ஸ் பா.தியாகராஜன் நினைவூட்டினார்.
அண்மையில் பத்துமலை சென்று வந்த
நம் பிரதமர், ஒற்றுமையின் வலிமையை அங்கே
உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பன்முகத் தன்மையே நம்மை
ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கிறது என அவர்
தெரிவித்தார்.
இன, மத வேறுபாடுகளை பயன்படுத்தி வெறுப்பு, பிளவு
மற்றும் சந்தேகங்களை விதைக்கும் எந்த முயற்சிகளையும் நாம் உறுதியாக நிராகரிக்க
வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், பிளவு படுத்தும் தீய சக்திகள் இன்னும் சுதந்திரமாகத்தான்
திரிகிறார்கள். எனவே, பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓம்ஸ் பா.தியாகராஜன்
கேட்டுக்கொண்டார்.
அவசரத்துக்கு மதம் மாறுனவன்
எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையான
நமது இனத்தை குப்பைகள் என்கிறான்.
பாவப்பட்டு விட்டு வைத்திருப்பதாகச் சொல்கிறான்.
உண்மையில் இந்த ஜம்ரிதான் இந்த
தேசத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய முக்கியமான குப்பை. இது மக்கும் குப்பை, மக்கா குப்பை அல்ல... மக்கு குப்பை. இந்தக் குப்பையை
அகற்றினால் மட்டும்தான் மலேசியா போன்ற அழகான நாடு இன்னும் அழகாகும், மக்களும் நிம்மதியாய் வாழ முடியும்.
அதை விட்டுவிட்டு, இப்படியே இந்தக் குப்பையை விட்டு வைத்தால் நாளடைவில் குப்பை
பெரிதாகி நாட்டில் நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும் என ஓம்ஸ் பா தியாகராஜன்
கடுமையாகச் சாடினார்.
ஜம்ரி எந்த அளவுக்கு குப்பை
போன்றவன் என்பதை அவனது உறவுப் பையனே வெளிப்படையாய் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதிலேயே தெரிகிறது ஜம்ரியின் நாற்ற வரலாறு என்று ஓம்ஸ் பா.தியாகராஜன்
சுட்டிக்காட்டினார்.
கோயில் ஹராம் பற்றி பேசியதற்காக
அவ்தார் சிங்கும் ஜம்ரிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதோடு
நேருக்கு நேர் விவாதத்துக்குத் தயாரா? என ஜம்ரியிடம் அவர் சவால் விடுத்துள்ளார்.
அப்படி ஜம்ரியிடம் நீதி, நேர்மை, நியாயம் இருந்தா, தான் பேசுவது உண்மைதான் என்றால், அவ்தார் சிங்குடன்
நேருக்கு நேர் விவாதத்தில் கலந்துகொள்ளலாமே? என ஓம்ஸ்
பா.தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.
இவனது குருநாநதர் ஜாகிர் நாயக்
மலேசியாவில் உள்ள சீனர்களும்,
தமிழர்களும் வந்தேறிகள், அவர்கள் சீனா வுக்கும்
இந்தியாவுக்கும் செல்ல வேண்டியதுதானே என்று, நம்ம நாட்டிலேயே
வந்து நம்ம நாட்டு குடிமக்களுக்கு எதிராகக் தத்துவம் பேசினார்.
முன்னாள் பிரதமர் மகாதீரும் ஜாஹிர்
நாயக்கின் அந்தப் பேச்சைக் கண்டித்தார். நான் இத்தனை ஆண்டுகாலம் பிரதமராக
இருந்துள்ளேன். நானே சொன்னதில்லை. ஜாஹிர்
நாயக் எப்படி சொல்லலாம் என மகாதீர் கண்டனம் செய்தார்.
அந்த ஜாஹிர் நாயக்கைத்தான்
தலையில் வைத்துச் சுற்றிக்கொண்டிருக்கிறார் இந்த ஜம்ரி.
எங்கிருந்தோ வந்து தன் சொந்த
நாட்டு மக்களை ஒருவன் அவதூறாகப் பேசுகிறான். அதனைக் கண்டிக்காமல் அதற்கு
வக்காலத்து வாங்கி கூடவே ஒத்து ஊதுகிறது இந்த ஜென்மம். இதை என்னவென்று சொல்ல?
எனவே அரசு இப்படித்
தேவையில்லாமல் சர்ச்சையை உருவாக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லாரது விருப்பமாக இருக்கிறது. உடனடியாக இது போன்ற
விஷ மனிதர்களை முறையாகக் கவனிக்குமாறு அரசுக்கு ஓம்ஸ் பா.தியாகராஜன் வேண்டுகோள்
விடுத்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
சுப்ரமணியம் த/பெ சின்னசாமி
அவசரதுக்கு மதம் மாருபவன் அரைவேக்காடு என்பதை அவனே நிரூபித்துள்ளான்



