PN-ல் இருந்து வெளியேறுகிறோமா?! - பாஸ் நிராகரிப்பு

top-news
FREE WEBSITE AD

பாங்கி, பிப் 2:  பெரிக்காத்தான் நேஷனல்  கூட்டணியிலிருந்து பாஸ் விலகவிருக்கிறது என்ற தகவல்களை கட்சியினர் நிராகரித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வந்த இந்த போக்குகள் தொடர்பான எந்த விவாதமும் நிகழவில்லை என்றும் தெரிவித்தனர்.
அது உண்மை அல்ல. நாங்கள் பெரிக்கத்தானுடன் ஒன்றுபட்டு இருக்கும் நிலையிலேயே தொடர விரும்புகிறோம் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

PN கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் ஒருமித்த செயல்பாட்டில் தொடர உறுதி செய்துள்ளதாக பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடீன் ஹசான் கூறினார்.
ஏற்கனவே கூட்டணியில் உள்ளோம். ஒருவரையும் புறக்கணிக்க முடியாது. PN இல் உள்ள நான்கு கட்சிகள் — பாஸ், பெர்சாத்து, கெராக்கான்  மற்றும்  MIPP ஆகிய கட்சிகள் நிலைத்திருக்கின்றன
அவர் கூறினார்.

முன்னதாக, பாஸ் ஆன்மிக தலைவர் ஹஷிம் ஜாசின், புதிய PN தலைவர் தொடர்பான முடிவற்ற நிலை நீடித்தால், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை தனியாக முன்னெடுக்க பரிந்துரைத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *