கோயில் ஹராம் - அப்படித்தான் நடத்துவோம்! - ஜம்ரி வினோத்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 7: “சட்டவிரோத” கோயில்களுக்கு எதிரான பேரணி, அரசின் வேண்டுகோளை மீறியும் நடைபெறும் என சர்ச்சைக்குரிய சமய போதகர் சம்ரி வினோத் (Zamri Vinoth)  தெரிவித்துள்ளார்.

பிரச்சாரம் மற்றும் தந்திரங்களால் ஏமாற மாட்டோம். நாங்கள் போராடுவோம். இன்று இரவு 8 மணிக்கு, கோலாலம்பூரில் உள்ள சோகோ (Sogo KL) முன்பாக பேரணி நடைபெறும என அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று  மலேசியா வரும் நிலையில், பேரணியை ரத்து செய்ய ஏற்பாட்டாளர்களை போலீசார் சந்திப்பார்கள் என உள்துறை அமைச்சகம் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது.
மோடியின் வருகைக் காலப்பகுதியில் எந்தவிதமான பொது கூடுகைகளையும் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ பொதுமக்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால், சம்ரி தலைமையிலான பல அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி சட்டவிரோத வழிபாட்டு தலங்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் சமீப வாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் அமைதியும் கட்டுப்பாடும் கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த பேரணியைத் தடுக்க வேண்டும் எனக் கோரி போலீசிலும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், அரசு பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் மோடியின் வருகைக்கு முன்னதாக நாட்டின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தும் எந்த முயற்சியையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அனுமதிக்கமாட்டார் என தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *