பத்துமலையில் பால்குடம் ஏந்திய அமெரிக்க தூதர்! மலேசிய பண்பாட்டின் உண்மையான சாட்சி தைப்பூசம் எனப் புகழாரம்
- Shan Siva
- 04 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 4: மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு டி. காகன், பத்துமலை தைப்பூசம் விழாவில் கலந்துகொண்டு பால் குடம் ஏந்தி வணங்கியது
பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் ஃபேஸ்புக் பதிவில்,
இந்த அனுபவம் மனதை இயக்கும் மற்றும்
நினைவிருக்கக்கூடியதாக இருந்ததாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
272 படிகள் + மரியாதையுடன் நிரம்பிய இதயம் =
பத்து மலையில் மறக்கமுடியாத வெள்ளிக்கிழமை
என்று பதிவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் மலேசிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளதோடு, தைப்பூச விழா மலேசியாவின் செழிப்பான
பாரம்பரிய மற்றும் பக்தி பண்பாட்டின் உண்மையான சாட்சி என்று வர்ணித்துள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



