மலேசியாவின் உண்மையான வலிமையை பத்துமலையில் உணர்ந்தேன்! - அன்வார்
- Shan Siva
- 31 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 31: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று பத்துமலைக்கு வருகை புரிந்த அன்வார். அந்த வருகை குறித்து தமது முகநூலில் பதிவிட்டுள்ளர்.
வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவு செய்த பின், பத்துமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலய வளாகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தாம் சென்றதாகக் குறிப்பிட்டுள்ள அன்வார்,
இந்த வருகையின் நோக்கம், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தைப்பூச விழாவை முன்னிட்டு, வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, தூய்மை மற்றும் வசதி அம்சங்கள் உரிய முறையில் கவனிக்கப்படுகின்றனவா என்பதை நேரில் பார்வையிடுவதற்கும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு கலாச்சாரங்களும் மதங்களும் இணைந்து வாழும் மலேசியாவின் உண்மையான வலிமையை தாம் தெளிவாக உணர்ந்ததாக அன்வார் பதிவிட்டுள்ளார்.
இத்தகைய பன்முகத் தன்மையே நம்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் ஒன்றிணைக்கிறது என அவர் தெரிவித்தார்.
இன, மத வேறுபாடுகளை பயன்படுத்தி வெறுப்பு, பிளவு மற்றும் சந்தேகங்களை விதைக்கும் எந்த முயற்சிகளையும் நாம் உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆலய நிர்வாகத்தினர், இந்து பக்தர்கள் மற்றும் வருகையாளர்கள் அளித்த மிகவும் அன்பான வரவேற்புக்கு மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு தைப்பூசம், அனைத்து இந்து பக்தர்களுக்கும் மகிழ்ச்சி, நலன் மற்றும் மனஅமைதியை கொண்டு வர இறைவனை வேண்டுவதாகவும் பதிவிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



