1 MDB-தான் நாட்டின் பெரும் கடன் சுமைக்குக் காரணம்! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 2: அரசாங்கத்தின் மிகப்பெரிய கடன் சுமை 1MDB இலிருந்து பெறப்பட்ட கடன்களால்தான் உருவானது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இதில் RM17 பில்லியன் வட்டியும் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது பேசிய அன்வார், அரசாங்கம் ஏற்கனவே அசல் மற்றும் வட்டி இரண்டையும் உள்ளடக்கிய RM42 பில்லியனை திருப்பிச் செலுத்தியுள்ளதாகக் கூறினார்.

அரசாங்கத்தின் மிகப்பெரிய கடனாக இன்னும் 1MDB தான் இருக்கிறது.  மொத்தம் RM34 பில்லியன், மேலும் RM17 பில்லியன் வட்டியையும் சேர்த்தால், மொத்தம் RM50 பில்லியனை நெருங்குகிறது என்று அவர் பக்காத்தான் ஹராப்பான பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்  சியாரெட்சான் ஜோஹனுக்கு இவ்வாறு பதிலளித்தார்.

இதுவரை, அரசாங்கம் அசல் மற்றும் வட்டி உட்பட RM42 பில்லியனை செலுத்தியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, சட்டத்துறை தலைமை அலுவலகம், நிதி அமைச்சு மற்றும் MACC முயற்சிகள் மூலம் RM29 பில்லியனை மீட்டெடுக்க முடிந்தது என்று அன்வார் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *