எனக்கான அமைச்சர் பொறுப்பு பூமிபுத்ராக்களைப் பாதிக்காது! – ஸ்டீவன் சிம்
- Shan Siva
- 18 Dec, 2025
புத்ராஜெயா, டிச 18: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் நியமனம் பூமிபுத்ரா சமூகத்தை ஓரங்கட்டிவிடும் என்ற கவலைகளை நிராகரித்து, அனைத்து மலேசியர்களுக்கும் சேவை செய்வதற்கான அவரது உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
டிஏபி துணைப் பொதுச்
செயலாளர் சிம், தனது பணிக்காலம்
முழுவதும் நிலைநிறுத்திய மதிப்புகளை தமை விமர்சிப்பவர்கள்
முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம் என்று கூறினார்.
ஒரு நல்ல மலேசியத் தலைவர்
இனம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மலேசியர்களையும் கவனித்துக்கொள்பவராக
இருக்க வேண்டும் அதைத்தான் தாம் கடைபிடிப்பதாக அவர் கூறினார்.
இது எப்போதும் எனது
நடைமுறை, எனது நம்பிக்கை, எனது கொள்கை, உண்மையில் எனது கட்சியின் கொள்கை என்று அவர் இன்று அமைச்சகத்தின் தலைமையகத்தில்
செய்தியாளர்களிடம் கூறினார்.
சிம் தொழில்முனைவோர்
மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு இலாகாவிற்கு மாறியது பூமிபுத்ரா தொழில்முனைவோருக்கு
ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் நோ ஒமார் முன்னதாக ஒரு அறிக்கையில் கூறினார்.
சமத்துவத்தை ஆதரிக்கும்
மற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையின் கொள்கைகளை அடிக்கடி கேள்விக்குள்ளாக்கும்
கட்சியான டிஏபியிலிருந்து ஒரு அமைச்சருக்கு இலாகா மாற்றப்பட்டது பூமிபுத்ரா நுண்,
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எதிர்கால
பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



