PH - BN எதிரி அக்மால் சலே! - பக்காத்தான் கூட்டணியின் இளைஞர் பிரிவினர் ஆவேசம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 13: வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் அம்னோ (Umno) மற்றும் பாஸ் (PAS) இணைந்து செயல்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்த அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சாலே, பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குள்  ஓர் “உள்ளக எதிரி” என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

மலாக்கா மாநில DAP, PKR மற்றும் அமானா கட்சிகளின் இளைஞர் தலைவர்கள், தற்போதைய கூட்டணியுடன் இணைந்து செயல்பட மறுத்து எதிர்க்கட்சியான PAS உடன் கூட்டணி குறித்து பேசுவது அக்மாலின் அரசியல் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என தெரிவித்தனர்.

மலாக்கா DAP இளைஞர் தலைவர் காசல் கிருஷ்ணன், PKR இளைஞர் தலைவர் ஹகிமின் மொக்தார் மற்றும் அமானாவின் அக்மத் அஸ்ரி அப்துல்லா ஆகியோர் ஒருங்கிணைந்த அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.

மாநில நிர்வாகத்தின் உறுப்பினராக அவர் நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் மக்களின் நலன் மீது கவனம் செலுத்த வேண்டும். கவலை உணர்வுகளை தூண்டும் அரசியல் தேவையில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘உள்ளக எதிரி’ என்ற சொற்றொடர் இச்சூழலில் பொருத்தமானதே. தற்போதைய மாநில அரசின் மீது மக்களின் நம்பிக்கையை குறைக்கும் செயல்கள், BN மற்றும் PH-க்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டினர்.

மெர்லிமாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அக்மால், மலாய் அரசியல் பிளவு சமூகத்தின் தாக்கத்தை பலவீனப்படுத்தியுள்ளதாக கூறி, அம்னோ மற்றும் பாஸ் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். நகர மையங்களுக்கு வெளியே, மலாய் மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்ற மனப்பாங்கு அதிகம் காணப்படுவதாகவும் அக்மால் கூறினார்.

இதற்கு பதிலளித்த PH இளைஞர் தலைவர்கள், இந்தக் கருத்து தவறானது என்றும், மலாய் சமூகத்தில் பயத்தை தூண்டுவதே நோக்கமாக இருப்பதாகவும் சாடினர்.
அவர் அம்னோ மற்றும் BN தலைமையிலான மாநில செயற்குழுவின் உறுப்பினர். அப்படியானால், முதலமைச்சர் அப்துல் ரவூப் யூசோ தலைமையிலான மாநில அரசு மலாய் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசியல் லாபத்திற்காக பய உணர்வுகளை பயன்படுத்தாமல், மக்களுக்காகப் பணியாற்றி, மலேசியர்களை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அக்மாலை அவர்கள் வலியுறுத்தினர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *