கோயில்களுக்கு எதிராகப் போராடியவர்களைக் காவல்துறை கைது செய்ய கூடாது! அம்னோ கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 8,

நேற்றிரவு கோயில்களுக்கு எதிராகத் தலைநகரில் போராட்டம் செய்தவர்களைக் காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Akmal Salleh தெரிவித்துள்ளார். இன்று ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் கடந்த காலங்களில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டமும் பேரணியும் அவர்களுக்கு நியாயமாக இருந்தது. இப்போது அவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கிறார்கள். ஆனால் இப்போது போராட்டம் நடத்தினால் கைது செய்வது நியாயமற்றது என Datuk Dr Akmal Salleh தெரிவித்தார். 

அவர்கள் பேரணியில் அமைதியாகப் பங்கேற்றனர். அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என Datuk Dr Akmal Salleh வலியுறுத்தினார். சட்டத்தை மீறி ஒரு குழு நிலங்களை ஆக்கிரமித்துள்ளது. அவர்களை எதிர்த்து பொதுமக்கள் பேரணி நடத்துகிறார்கள். அப்படியானால் கைது செய்யப்பட வேண்டியது நிலத்தை ஆக்கிரமித்த தரப்பைத் தானே தவிர பேரணியில் பங்கேற்றவர்களை அல்ல என Datuk Dr Akmal Salleh தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *