PN - BN என்பது வெறும் அலங்காரம்தான்! - சனுசி

top-news
FREE WEBSITE AD

ஜெம்போல், ஜூலை 24: பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பாரிசான் நேஷனல் இடையேயான தேர்தல் ஒத்துழைப்புக்கு பெரிகாத்தான் பாரிசான் நேஷனல் (PBN) எனப் பெயரிடும் முன்மொழிவு, ஒருவேளை சாதாரணமாக முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அது ஒருபோதும் முறையாக விவாதிக்கப்படவில்லை என்றும் PN தேர்தல் இயக்குனர் சனுசி நோர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அதிகாரப்பூர்வ கூட்டத்திலும் இந்த முன்மொழிவு எழுப்பப்பட்டதை தான் கேட்டதில்லை என்றும், இது பார்ட்டி வவாசான் நேகாரா தலைவர் ஹம்சா ஜைனுடினின் தனிப்பட்ட கருத்து என்றும் சனுசி கூறினார்.
ஒருவேளை அது சாதாரணமாக முன்வைக்கப்பட்ட ஒரு ஆலோசனையாக இருக்கலாம். அந்த மட்டத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை.

அந்தப் பதத்தை முன்மொழிந்தவர் ஹம்சா மட்டுமே. இந்தப் பெயர் வெறும் அலங்காரத்திற்கானது மட்டுமே, இதை ஊதிப் பெரிதாக்கக் கூடாது, ஏனெனில் இதில் கொள்கை எதுவும் இல்லை என்று நேற்று இரவு செர்டிங் மாநிலத் தொகுதியில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *