நேற்று இரவு பாஸ் - அம்னோ சந்திப்பு! - ஹாடி அவாங் உறுதிப்படுத்தினார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 5: முவாஃபாகத் நேஷனல் கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், பாஸ் மற்றும்  அம்னோ தலைவர்கள் நேற்று இரவு சந்தித்ததை பாஸ்  தலைவர் அப்துல் ஹாடி அவாங் உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், அந்தச் சந்திப்பை ஒரு "சாதாரண கூட்டம்" என்று அவர் குறைத்து மதிப்பிட்டார், மேலும் அதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் கூறினார்.

எங்களைச் சந்திக்க விரும்பும்  அம்னோ தலைவர்களை நாங்கள் சந்திக்கிறோம். நான் இதில் சம்பந்தப்படவில்லை. ஆனால் அவர்கள் எனக்குத் தகவல் தெரிவித்தனர் என்று மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இன்று திரெங்கானுவில் உள்ள மஸ்ஜித் ருசிலாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த இந்தச் சந்திப்பில்,  பாஸ் துணைத் தலைவர் இட்ரிஸ் அகமது மற்றும் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் ஆகியோரும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

அம்னோவின் அரசியல் குழுவும் நேற்று அதே ஹோட்டலில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹாடியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் பாஸ் மற்றும் அம்னோ இணைந்து செயல்பட வேண்டும் என்றும், தங்களின் முவாஃபாகத் நேஷனல் கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க இதுவே சரியான நேரம் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.

தனது பெரிகாத்தான் நேஷனல்  கூட்டணிக் கட்சியான பெர்சாத்துவுடனான உறவை பாஸ் கட்சி மறுபரிசீலனை செய்து வரும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *