RM 15 லட்சம் மதிப்பில் இந்துக்களுக்கான புதிய தகனக்கூடம்!
- Thinagaren Sanggaren
- 16 Feb, 2026
பிப்ரவரி 16,
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிலத்தில் இந்துக்களுக்கான புதிய தகன நிலையம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பினாங்கின் Jalan Telaga Air பகுதியில் இந்த புதிய தகன நிலையம் அமைப்பதற்காகப் பிரதமர் Dato’ Seri Anwar Ibrahim 15 லட்சம் நிதி வழங்கியிருப்பதாக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தெரிவித்துள்ளது. முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் இன்று முதல் குத்தகைகளுக்கான TENDER அறிவிக்கப்பட்டுள்ளது.
2 புதிய கட்டிடங்களுடன் நவீன எரியூட்டிகள் அடங்கியதாக
இந்த தகன நிலையம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பினாங்கு மாநில இந்துக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருப்பதாகப் பிரதமர் அன்வாரிடம்
தெரிவித்த போது உடனடியாக அதற்கான நிதியை வழங்கியதாகவும் விரைந்து கட்டுமானப் பணிகளை
மேற்கொள்ளவதாகவும் பினாங்கு இந்து
அறப்பணி வாரியம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடைய வேண்டும்
என்பதால் பொதுவில் குத்தகையாளர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டிருப்பதாக பினாங்கு
இந்து அறப்பணி வாரியம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்
RSN RAYER, முன்னாள் நிதி அமைச்சரும் Bagan
நாடாளுமன்ற உறுப்பினருமான lim guan eng, செனட்டர் லிங்கேஸ்வரன், Bagan Dalam சட்டமன்ற உறுப்பினர்
குமரன் கிருஷ்ணன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



