2026ஆம் ஆண்டு இ-விளையாட்டு மையம் இயங்கும் - அடாம் அட்லி!

- Muthu Kumar
- 28 Jun, 2025
மலேசிய இளைஞர், விளையாட்டு அமைச்சு உருவாக்கும் இ-விளையாட்டு மையம் 2026இல் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் அடாம் அத்லி அப்துல் ஹலிம், இந்த மையத்தின் செயல்பாடு குறித்த மேலதிக விவரங்கள் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த மையம் 2026இல் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என நம்புவதாக அவர் கூறினார். இவர் இந்த அறிவிப்பை கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் இளைஞர் இ-விளையாட்டுப் போட்டியின் விழாவில் தெரிவித்தார்.இந்த இ-விளையாட்டு மையம் வெறுமனே அவ்விளையாட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாமல், பல்நோக்கு மண்டபமாகவும் செயல்படும் என்று அடாம் அட்லி வலியுறுத்தினார். இந்த வசதி முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
இந்த மையம் மலேசியாவின் இ-விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிகள் மலேசியாவின் இ-விளையாட்டு அணியை வலுப்படுத்துவதற்கும், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லுவதற்கும் உதவும் என அடாம் அட்லி நம்பிக்கை தெரிவித்தார். பப்ஜி மொபைல், மொபைல் லெஜண்ட்ஸ்: பேங் பேங், லீக் ஆப் லெஜண்ட்ஸ் போன்ற விளையாட்டுகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற உள்ளன.
இந்த மையம் இளைஞர்களிடையே இ-விளையாட்டை ஊக்குவிக்கவும், திறமைகளை வளர்க்கவும், மலேசியாவை இ-விளையாட்டுத் துறையில் முன்னணி நாடாக உயர்த்தவும் உதவும்.
Pusat e-sukan Malaysia dijangka mula beroperasi pada 2026. Timbalan Menteri Adam Adli menyatakan pusat itu akan menjadi dewan serbaguna dan memajukan bidang e-sukan negara, menjelang temasya Sukan Asia 2026 dengan penyertaan permainan popular.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *