GLC - GLIC நிறுவனங்களில் 50% பூமிபுத்ராக்களுக்கு என்பதை தெளிவுபடுத்த வேண்டும்! - அரசுக்கு பாஸ் அறிவுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 26: அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLCs) மற்றும் அரசு சார்ந்த முதலீட்டு நிறுவனங்கள் (GLICs) சம்பந்தப்பட்ட, RM20 மில்லியன் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உயர் மதிப்பு சொத்துப் பரிவர்த்தனைகளில் 50% பூமிபுத்ரா உரிமை இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தெளிவுபடுத்துமாறு பாஸ் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான், முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை வாங்குவதில் பூமிபுத்ராக்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை பாஸ் ஆதரித்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் தெளிவாகவும், வெளிப்படையாகவும், சீராகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தக்கியுதீன் கூறினார்.

DAP-யின் மூத்த தலைவர் லிம் குவான் எங்  பிரதமர் அன்வர் இப்ராஹிமிடம், 50% பூமிபுத்ரா பங்குரிமைக் கொள்கையை அதன் அசல் 30%-ஆகக் குறைக்குமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து PAS-இன் இந்த அறிக்கை வந்துள்ளது.   

ஒரு அறிக்கையில், முன்னாள் நிதியமைச்சர், புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பக்கத்தான் ஹராப்பானின் முக்கிய ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சந்தை நம்பிக்கையைப் பாதித்துள்ளதாகவும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *