10 வயது மாணவர் சுங்கை செலிக் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டான்! தேடுதல் வேட்டை தீவிரம்
- Shan Siva
- 28 May, 2026
கோலசிலாங்கூர், மே 28: சிலாங்கூர் ஹுலுவில் உள்ள காம்பங் சுங்கை நிலம் அருகே உள்ள சுங்கை செலிசெக் ஆற்றில், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் 10 வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
கோலா குபு பாரு தீயணைப்பு நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
சுமார் 40 கி.மீ. பயணித்த பின்னர், பிற்பகல் 2.35 மணிக்கு அக்குழுவினர் சம்பவ இடத்தை அடைந்ததாக அது கூறியது.
தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



