ஜொகூரில் வெளிநாட்டினர் 108 பேர் கைது!
- Shan Siva
- 22 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 21: ஜொகூரில் பயண மற்றும் குடிநுழைவு சட்டங்களை
மீறியதாக, வணிகம்
நடத்தி வந்த சிலர் உட்பட 108 வெளிநாட்டவர்கள் ஜொகூர் குடிநுழைவு
துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை
20 இரவு,
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும்
பாதுகாப்பு முகமை (AKPS) உடன்
இணைந்து தாமான் ஸ்ரீ பகாகியா பகுதியில் வெளிநாட்டவர்களால்
நடத்தப்பட்டதாக அறியப்பட்ட கடைகளை குறிவைத்து சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர்
குடிநுழைவு துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தரூஸ் தெரிவித்தார்.
இந்தச் சோதனையில்
உணவகங்கள், கைப்பேசி
விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
வெளிநாட்டவர்கள்
மலேசியாவில் சட்டப்படி தங்கியுள்ளனரா, அவர்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டவையா
என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களின் பயண
ஆவணங்கள், அனுமதிச்
சீட்டுகள் மற்றும் விசாக்கள் பரிசோதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதன் விளைவாக,
18 முதல்
49 வயதுக்குட்பட்ட
101 ஆண்களும்,
7 பெண்களும் பல்வேறு குடிநுழைவு
சட்ட மீறல்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தோனேசியா,
நேபாளம்,
இந்தியா,
மியான்மர்,
வங்கதேசம்
மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும்,
விசாரணைக்கு சாட்சிகளாக ஆஜராகுமாறு இரு
மலேசியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக செத்தியா ட்ரோபிகா குடிநுழைவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



