சீன தனியார் பள்ளிக்கு 10 லட்சம் வெள்ளி! - அமைச்சர் நன்றி
- Shan Siva
- 13 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 13: புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஜித் சின் தனியார் பள்ளிக்கு
மொத்தம் 10 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அத்தொகுதி நாடாளுமன்ற
உறுப்பினர் ஸ்டீவன் சிம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்த விஷயத்தில்
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஒதுக்கீட்டை அவர் வழங்கினார். உங்கள் நிலையான
ஆதரவு இல்லாமல் இவை அனைத்தும் சாத்தியமில்லை பொதுமக்களிடம் அவர் தெரிவித்தார்.
கடந்த, சனிக்கிழமை, நாடு முழுவதும்
உள்ள 63 சீன தனியார் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு 2 கோடிக்கும் அதிகமான நிதி
ஒதுக்கீட்டை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாக அன்வார் அறிவித்தார். அதில் பிரத்தியேகமா
புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஜித் சின் பள்ளிக்கு 10 லட்சம் கொடுப்பதாகக் கூறியிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



