வேனில் இருந்து கீழே விழுந்த 10 லட்சம் வெள்ளி மாயம்! காவல்துறை உஷார்!

top-news

கோலாலம்பூர், நவம்பர் 7: தலைநகர், அம்பாங் பாயிண்டில் பாதுகாப்பு வேனில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படும் 1 மில்லியன் ரிங்கிட் பணப் பை காணாமல் போனது குறித்து நகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

காணாமல் போன பணத்தைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளில் சிலாங்கூர் காவல்துறைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக நகர காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா கூறினார்.

இதுவரை தங்களுக்கு உதவிக்கான எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றாலும், தங்கள் குழுவில் உள் பணியாளர்கள் இந்த சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சில நேரங்களில் இதுபோன்ற வழக்குகள் பல்வேறு காவல் மாவட்டங்களின் எல்லைகளுக்கு அருகில் நடப்பதால், தங்கள் பணியாளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த அவர்,  அவர்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல் இருந்தால், நாங்கள் மகிழ்ச்சியுடன் அதைச் செய்வோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்