பிரான்சில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்ட 11 பேருக்குச் சிகிச்சை

top-news
FREE WEBSITE AD

பிரான்சில் ஹண்டா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக 11 பேருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் “எம்.வி ஹொண்டியஸ்” என்ற சுற்றுலா கப்பலில் பயணம் செய்தவர்களிடையே கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தொற்றால் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. தற்போது பிரான்சில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை நுரையீரல் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹண்டா வைரஸ் பொதுவாக எலிகள் போன்ற உயிரினங்களின் கழிவுகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. ஆனால் இந்த முறை கண்டறியப்பட்ட “ஆண்டிஸ்” வகை ஹண்டா வைரஸ் மனிதர்களிடையே அரிதாகப் பரவக்கூடிய தன்மை கொண்டதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *