கிள்ளானில் காரிலிருந்து இறங்கி உணவு எடுக்கச் சென்ற 12 வயது சிறுமியைக் காணவில்லை!

top-news

பெட்டாலிங் ஜெயா, அக். 11-

கிள்ளானிலுள்ள ஓர் அடுக்ககத்தின் கீழ் இருந்த காரிலிருந்து இறங்கி உணவு எடுக்கச் சென்ற 12 வயது சிறுமியைக் காணவில்லை.இச்சம்பவம் குறித்த புகார் போலீசுக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.59 மணிக்குக் கிடைத்ததாக கிள்ளான் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

அன்றைய தினத்தில் பிற்பகல் 2.20 மணிக்கு காரிலுள்ள உணவை எடுத்து வரும்படி தன் தாயார் கூறியதும் மட்ராஃபாத்தாஹா இண்டால் பங்சாவான் என்ற அச்சிறுமி
பண்டார் புக்கிட் திங்கி 1 அடுக்ககத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இறங்கினாள். எனினும், அதன் பிறகு அவள் வீட்டிற்குத் திரும்பவில்லை.

அதனைத் தொடர்ந்து மட்ராஃபாத்தாஹாவை தாயார் பிற்பகல் 3.00 மணிக்குத் தேடினார். இருந்த போதிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.சிறுமியின் தாயார் அதன் பிறகு இச்சம்பவம் தொடர்பில் புகார் செய்ததில் ஆள் காணாமல் போனது தொடர்பில் ஒரு விசாரணைக் கோப்பை கிள்ளான் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைமையகம் திறந்தது.

மெலிந்த உடல், வெளிர் நிற தோல், தோள்பட்டை வரையிலான முடி மற்றும் 150 செ.மீட்டர் உயரத்தை அச்சிறுமி கொண்டிருப்பாள்.ஆகக் கடைசியாகப் பச்சை நிறத்திலான டி-சட்டை மற்றும் கருமை நிறத்திலான டிரெக் கால்சட்டையை அவள் அணிந்திருந்தாள்.

இச்சிறுமி பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் செய்யலாம் என்று செய்தியாளர்களிடம் பேசிய போது ஏசிபி சா ஹூங் ஃபோங் குறிப்பிட்டார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்