‘மேக் இன் இந்தியா’ திட்டம் 12 ஆண்டுகள் நிறைவு – பிரதமர் மோடி பெருமிதம்
- Surendran Sumdraraj
- 25 Sep, 2026
புதுடெல்லி: இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டம் இன்று 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, நாட்டின் உற்பத்தி, முதலீடு மற்றும் ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2014 செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இந்தியாவில் முதலீடுகளை ஈர்த்தல், உற்பத்திக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவை முக்கிய உலக உற்பத்தி மையமாக உருவாக்குதல் ஆகிய இலக்குகளுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் 12-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டார். அதில் அரைக்கடத்தி, விண்வெளி, இரயில்வே, கப்பல் கட்டுமானம், வாகனத் தயாரிப்பு, மருந்து, சூரிய ஆற்றல் மற்றும் கைப்பேசி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
“இந்தியாவில் அதிக உற்பத்தி, அதிக முதலீடு, இந்தியாவிலிருந்து அதிக ஏற்றுமதி; அனைத்துத் துறைகளிலும் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது,” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



