12 ஆவது குளோபல் வர்த்தக மாநாட்டு இலச்சினை வெளியீடு!
- Muthu Kumar
- 01 Sep, 2025
இலங்கையின் பொருளாதாரம் வேகமாக முன்னேற்றமடைந்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் வரும் டிசம்பர் மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெறுகின்ற 12ஆவது வர்த்தக மாநாட்டில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர்களோ அல்லது பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அதிகாரிகளோ கலந்து கொள்வதன் மூலம் இலங்கைக்கான மேலும் பல முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது என உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் குளோபல் வர்த்தக மாநாட்டின் ஏற்பாட்டாளருமான செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
மாநாட்டின் உத்தியோகபூர்வ இலச்சினை நேற்றைய தினம் (31.8.2025) ஹட்டன் ஹில் கூல் விருந்தகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் குளோபல் வர்த்தக மாநாட்டின் ஏற்பாட்டளருமான செல்வகுமார் வெளியிட்டு தொடக்கி வைத்தார். இலங்கைக்கு வருகை தந்துள்ள செல்வகுமார் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த செல்வகுமார். கடந்த 11 ஆண்டுகளாக உலகத்
தமிழ் வர்த்தக சங்கம் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தி வரும் உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு இவ்வாண்டு டிசம்பர் 6, 7 ஆம் தேதிகளில் ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள Stanh Ee Leisure Cebtre பிளாக் கவுனில் பன்னிரண்டாவது குளோபல் வர்த்தக மாநாடு நடைபெற உள்ளது.
இலங்கையில் உள்ள சிறு குறுந்தொழில் அதிபர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு ஏற்றுமதி,இறக்குமதி வாய்ப்புகளை பெற வேண்டும் எனவும் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களை பல்வேறு நாடுகளில் இருந்து வரும் தொழிலதிபர்களுடன் காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை இலங்கைக்கு அழைத்து முதலீடுகளை ஏற்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசு போர்ட் ஆஃப் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் தொடங்கவும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் பல்வேறு நாடுகளில் கிளை அமைக்கவும் இம்மாநாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை தனது நாட்டிற்கான முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான முனைப்புடன் செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தொடர்புக்கு +60166167708.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



