2021–2025 காலகட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் தொடர்பான 13 குற்றவழக்குகள் நீதிமன்றத்தில் நிரூபணம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 4-

2021 முதல் 2025 வரை உள்ள காலகட்டத்தில், பள்ளி முதல்வர்கள் மற்றும தலைமை ஆசிரியர்களைச் சேர்ந்த மொத்தம் 13 குற்றவழக்குகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் படீலினா சிடெக் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்குகளில் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கு, நிதி மேலாண்மை குற்றச்சாட்டு தொடர்பான எட்டு வழக்குகள், பாலியல் தொந்தரவு தொடர்பான மூன்று வழக்குகள் மற்றும் ‘கல்வாத்’ (அநாகரிக உறவு) தொடர்பான ஒரு வழக்கு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் கல்வி அமைச்சு (KPM) மிகவும் கவனமாகவும் தீவிரமாகவும் எடுத்துக் கொண்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

“நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு வழக்கும் அதிகாரிகளால் விரிவாக ஆய்வு செய்யப்படும். ஒவ்வொரு வழக்கின் உண்மை நிலை மற்றும் சூழ்நிலைகளைப் பொருத்து பொருத்தமான தண்டனைகள் நிர்ணயிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

மேலும், கல்வித் துறையில் ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வை நிலைநிறுத்துவதற்காக கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *