1,347 கிலோகிராம் கெத்தும் இலைகள் பறிமுதல்! 11 பேர் கைது!

top-news

 (இரா.கோபி)

பிரிக்பீல்ட்ஸ், நவம்பர் 18: பிரிக் பீல்ட்ஸ் மாவட்ட போலீஸார்‌ இம்மாதம்‌ 15ஆம்‌ தேதி இரவு 8.50         மணியளவில்‌ ஜாலான்‌ தான்‌ இயூலாயில்‌ சந்தேகத்திற்கிடமான கடைவீடு ஒன்றில்‌ ஓர்‌ ஆடவரைக்‌ கைது செய்து விசாரணை. மேற்கொண்டதில்‌ 1,347 கிலோகிராம்‌ எடையுள்ள கெத்தும்‌ இலைகளை போலீஸார்‌ பறிமுதல்‌ செய்துள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறை தலைவர்‌ ஏசிபி கு மஸாரி மான்‌ கு மாமுட்‌ தெரிவித்தார்.

அந்த போதைப்பொருளின்‌ மதிப்பு 69,808 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது. போலீஸாரின்‌ சோதனை நடவடிக்கையில்‌ கெத்தும்‌ இலைகளை ஏற்றிச்‌ செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட லோரி ஒன்றும்‌ கைப்பற்றப்பட்டது. மேலும், போதைப்பொருள்‌ சம்பந்தப்பட்ட 11 ஆடவர்களை போலீஸார்‌ கைது செய்திருக்கின்றனர்‌. அவர்கள்‌ 27 முதல்‌ 47 வயதுடையவர்கள்‌ என்று அவர்‌ கூறினார்‌.

விசாரணையில்‌ அண்‌டை நாட்டிலிருந்து இந்த கெத்தும்‌ இலைகளை வாரத்திற்கு ஒருமுறை ‌ கொண்டு வருவது தெரியவந்ததாக அவர்‌ கூறினார்‌. இந்த கெத்தும்‌ இலை விநியோகம்‌ கடந்த மூன்று மாத காலமாக நடந்து வந்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில்‌ அறுவருக்கு ஏற்கெனவே போதைப்பொருள்‌ சம்பந்தமான வழக்குகள்‌ உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பறிமுதல்‌ செய்யப்பட்ட கெத்தும்‌ இலை கிட்டத்தட்ட 2,000 பேர்‌ உபயோகிக்கக்கூடியது என்று தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்