மலேசியாவில் வெப்பநிலை எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 23-

மலேசிய வானிலைத் துறை (MetMalaysia) வெளியிட்டுள்ள தகவலின்படி, கெடா மாநிலத்தின் பாடாங் தெராப் பகுதியில் வெப்பநிலை இரண்டாம் நிலை (வெப்பஅலை) எச்சரிக்கையில் உள்ளது.

அந்த அறிக்கையில், அங்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மலேசிய தீபகற்பத்தின் 14 பகுதிகளில் முதல் நிலை (எச்சரிக்கை) நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெர்லிஸ் முழுவதும், கெடாவின் பாலிங், சிக், பெண்டாங், போக்கோக் சேனா, குபாங் பாசு, புலாவ் லங்காவி, குவாலா முடா மற்றும் பண்டார் பாரு பகுதிகள் இதில் அடங்குகின்றன. மேலும், பினாங்கின் தீமூர் லாவுத், பேராக்கின் ஹுலு பேராக் மற்றும் கோலா கங்சார், பகாங்கின் ஜெரான்டுட் மற்றும் நெகிரி செம்பிலானின் ரெம்பாவ் பகுதிகளிலும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

MetMalaysia விளக்கத்தில், வெப்ப அலை நிலை என்பது குறைந்தது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் போது அறிவிக்கப்படுகிறது. அதேபோல், 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இருந்தால் அது முதல் நிலை எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *