வெளிநாடுகளில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் 1,588 மலேசியர்கள் கைது!

top-news

கோலாலம்பூர், அக் 29: இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3,322 மலேசியர்களில், கிட்டத்தட்ட பாதிப் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


இந்த ஆண்டு மட்டும் 1,588 மலேசியர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் சுமார் 48 விழுக்காடு என்று வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.


2024ஆம் ஆண்டு 1,181 மலேசியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 1,303ஆக உயர்ந்தது. இவ்வாண்டு மேலும் அதிகரித்து 1,588ஐ எட்டியுள்ளது.


இந்தோனேசியாவில் 381 பேரும், சீனாவில் 380 பேரும், சிங்கப்பூரில் 310 பேரும், தாய்லாந்தில் 102 பேரும், ஜப்பானில் 72 பேரும் போதைப்பொருள் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும், 40 நாடுகளில் மலேசியர்கள் இத்தகைய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக லுகானிஸ்மான் தெரிவித்தார்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்