ஐ பி எல் தொடரில் பஞ்சாப் அணியின் நிலை என்ன?

top-news
FREE WEBSITE AD




ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பை வெல்லாத அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. சீசனுக்கு ஒரு கேப்டன், சீசனுக்கு ஒரு பயிற்சியாளர் என்று மாற்றி வந்த பெருமை பஞ்சாப் அணிக்கு மட்டுமே உண்டு. ஆனால் கடந்த 2 சீசன்களாக பஞ்சாப் அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது.

ஏனென்றால் மும்பை, சென்னை போன்ற அணிகளையே அதன் சொந்த மண்ணில் பஞ்சாப் அணி வீழ்த்தியது. இந்த நிலையில் நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. கேப்டன் ஷிகர் தவான் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், சாம் கரண் கேப்டன்சி பணியை மேற்கொண்டு வந்தார்.

இதனால் சொந்த மண்ணில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தாலும், சென்னை, கொல்கத்தா, குஜராத் உள்ளிட்ட அணிகளை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இருப்பினும் பஞ்சாப் அணி அடுத்து விளையாடவுள்ள 3 போட்டிகளில் 3லும் வென்றால், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *