ஹன்னா யியோ மீது 180 போலீஸ் புகார்கள்!

- Shan Siva
- 08 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 8: இளைஞர் மற்றும்
விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யியோவின் ‘பிகமிங் ஹன்னா: எ
பர்சனல் ஜர்னி’ புத்தகம் தொடர்பாக 182 போலீஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி
முகமட் இசா தெரிவித்தார்.
நடந்து வரும் விசாரணை தொடர்பாக 59 நபர்களின் வாக்குமூலங்களை போலீஸார் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
இருப்பினும், இன்னும் அமைச்சரின்
அறிக்கையை பதிவு செய்யவில்லை என்றும், விரைவில் அதை திட்டமிடுவோம் என்றும் அவர் இன்று தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *