WWE வீரர் 'தி கிரேட் காளியின்' பிரமிப்பூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல்!!

top-news
FREE WEBSITE AD

7 அடி 1 அங்குலம் உயரம் கொண்ட 'தி கிரேட் காளி' எனப்படும் தலிப் ராணா சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த, முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவர். பின்னர், 2000ஆம் ஆண்டில் தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் 'தி கிரேட் காளி' என்ற பெயரில் அறிமுகமாகி, 2006ஆம் ஆண்டு WWE போட்டிகளில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்தார். அதில் பல சாம்பியன் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

தற்போது மல்யுத்த போட்டிகளில் விளையாடுவதை குறைத்துக்கொண்டு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவரும் தி கிரேட் காளி, அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பிரமிப்பூட்டும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தொழில்முறை போட்டிக்கு வருவதற்கு முன்பு, அவர் எப்படி இருந்தார் என்பதை குறிக்கும் வகையிலான தனது பழைய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆரம்ப நாட்களில் இருந்தே பாடி பில்டிங் செய்வதில் ஆர்வம் கொண்டவரான தி கிரேட் காளி, பல்வேறு ஆணழகன் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். அந்த வகையில், தற்போது அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், கட்டுக்கோப்பான உடலுடன் நடுவர்கள் முன்னிலையில், போஸ் கொடுத்தபடி நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

1998ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டி நடந்த அந்த நாட்களில் தி கிரேட் காளிக்கு 26 அல்லது 27 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த போட்டியில் பங்கேற்ற தி கிரேட் காளி, பட்டத்தையும் வென்றுள்ளார்.

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *