நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியீடு காண்கிறது

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், வரலட்சுமி சரத்குமா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்துள்ளனர். ஏற்கனவே படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரோடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் படம் குறித்த அப்டேட்டை இன்று அதாவது மே மாதம் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிப்பதாக படத்தின் இயக்குநர் தனுஷ் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. இது ராயன் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில் படக்குழு கொடுத்த அப்டேட்டில், ஜூன் மாதத்தில் படம் வெளியாகும் என்றும், மே மாதம் 9ஆம் தேதி முதல் பாடல் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. அதாவது இன்னும் மூன்று தினங்களில் முதல் பாடல் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடசென்னையைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தனுஷூடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் காளிதாஸ் இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Already Subscribed ? Sign in

lockicon
Unlock News to Read
Subscribe Now
ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *