பட்டாசு கூடங்கள் தீப்பற்றியது
- Surendran Sumdraraj
- 24 Mar, 2026
கோத்தா பாரு, மார்ச் 24-
வாகாப் சே யே இரவு சந்தை அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு பட்டாசு கூடங்கள் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து நாசமடைந்தன.
கோத்தா டாருநாயிம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் அஹமட் பகருட்டின் பெராஹிம், இவ்விபத்து காலை 10.12 மணியளவில் அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் சென்றடைந்தாகக் கூறினார்.
இந்த தீ விபத்தில் 20 x 20 அளவுள்ள இரண்டு கூடங்கள், முக்கிய சாலைக்கு அருகிலுள்ள கடையின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த நிலையில் எரிந்து சேதமடைந்தன. மேலும், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாகியானதாக அவர் கூறினார்.
தீ விபத்தினால் அருகிலுள்ள கடைகளின் கட்டமைப்பில் சூடு மற்றும் புகை தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், பெரிய சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தீயணைப்பு நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்பட்டு, காலை 11.44 மணியளவில் முழுமையாக நிறைவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



