மியான்மர்-தாய்லாந்து எல்லையில் சிக்கிய 31 மலேசியர்களை மீட்க இன்னும் 2 வாரங்களாகும் – வெளியுறவு அமைச்சர்
- Tamil Malar (Reporter)
- 10 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 10-
வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கி மியான்மர்-தாய்லாந்து எல்லையில் சிக்கித் தவிக்கும் 31 மலேசியர்களை நாடு திரும்ப அழைத்துவரும் பணி குறைந்தது இரண்டு வாரங்களாவது எடுக்கும் என வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசான் தெரிவித்தார்.
இவர்கள் தாய்லாந்துக்குச் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால், காவலில் வைப்பு, நீதிமன்ற நடவடிக்கை, அபராதம் செலுத்துதல், தற்காலிக தடுப்புக்காவல் உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டியிருப்பதே தாமதத்திற்கு காரணம் என்று அமைச்சர் விளக்கினார்.
தாய்லாந்தில் உள்ள மலேசிய தூதரக அதிகாரிகள், தாக் மாகாண குடியேற்றத் துறை, தாய்லாந்து காவல்துறையினரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த 31 பேரும் மேசாட் பகுதியில் தாய்லாந்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
“அவர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் அழைத்துவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என வெளியுறவு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



