2 இந்தோனேசியர்கள் கைது ரூ.44 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

top-news
FREE WEBSITE AD

தஞ்சோங் செப்பாட், மே 26-

சிலாங்கூர் மாநிலம் தஞ்சோங் செப்பாட் கடற்கரைப் பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு இந்தோனேசிய ஆண்களைப் போலீசார் கைது செய்ததுடன், சுமார் RM4.4 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சட்டவிரோத குடியேறிகளாக (PATI) இருந்த 30 வயதுக்கு மேற்பட்ட இரு சந்தேக நபர்களும், நாட்டை விட்டு தப்பிச் செல்ல படகுக்காகக் காத்திருந்ததாக நம்பப்படுகிறது. கடந்த முன்தினம் காலை 11.30 மணியளவில் பொதுப்படை போலீஸ் பிரிவு (PGA) மேற்கொண்ட திடீர் சோதனையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சோங் செப்பாட் பகுதியில் உள்ள Jalan Ladang Tumbok Belangkan கடற்கரை அருகே, பெரிய குழாய் அமைப்பின் பக்கத்தில் புதர்பகுதியில் மறைந்து இருந்தபோது அவர்கள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இடம் PGA Ladang Tumbok முகாமிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.

மத்திய பிரிகேட் PGA தளபதி Senior Asisten Komisioner Hakemal Hawari கூறுகையில், சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த இடத்தில் மேற்கொண்ட சோதனையில் சுமார் 88.989 கிலோ எடையுள்ள ‘ஷாபு’ வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *