IJM நிறுவன விவகாரம்: SPRM மீண்டும் இரண்டு உயர்மட்ட நிர்வாகிகளை விசாரிக்கிறது

top-news

கோலாலம்பூர், ஜன. 21-

நாட்டின் முக்கியக் குழுமங்களில் ஒன்றான IJM கார்ப்பரேஷன் பெர்ஹாட் (IJM) நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட நிர்வாகிகள், இன்று புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தலைமையகத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்ப்பரேட் நிர்வாகம், கொள்முதல் நடைமுறைகள், நிதி பரிவர்த்தனைகள், வெளிநாடுகளில் உள்ள சொத்துகளின் உரிமை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, குறைந்தது ஐந்து பேர் இன்று சாட்சிகளாக அழைக்கப்பட உள்ளனர். வெளிநாட்டு சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் 2.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை SPRM ஒன்பது பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும், அதில் விசாரணைக்கு உட்பட்ட IJM நிறுவனத்தின் இரண்டு உயர்மட்ட நிர்வாகிகளும் அடங்குவதாகவும் ஒரு நம்பகமான மூலதகவல் தெரிவித்துள்ளது.

“இன்று, அந்த இரண்டு நபர்களின் வாக்குமூல பதிவு தொடரப்படலாம். அதே நேரத்தில், மேலும் ஐந்து சாட்சிகளிடமிருந்தும் விளக்கங்கள் பெறப்படும்,” என அந்த மூலதகவல் கூறியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *