அமெரிக்காவில் விமானக் கண்காட்சியின்போது நடுவானில் மோதிய 2 போர் விமானங்கள்

top-news
FREE WEBSITE AD

United States நாட்டின் ஐடஹோ மாநிலத்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது இரண்டு அமெரிக்க கடற்படை போர் விமானங்கள் நடுவானில் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் Mountain Home Air Force Base விமானப்படை தளத்தில் நடைபெற்ற “Gunfighter Skies” விமானக் கண்காட்சியின் போது இடம்பெற்றது. இரண்டு EA-18G Growler வகை போர் விமானங்கள் வான்வழி சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது ஒன்றுடன் ஒன்று மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானங்கள் மோதிய உடனே அவற்றில் இருந்த நான்கு விமானப்படை வீரர்களும் அவசர ejection முறையின் மூலம் பாதுகாப்பாக வெளியேறினர். பின்னர் அவர்கள் பாராசூட் உதவியுடன் தரையிறங்கியதாகவும், அனைவரும் உயிர் தப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில், இரண்டு விமானங்களும் வானில் மோதிய பின்னர் தீப்பிடித்து கீழே விழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சம்பவத்தையடுத்து விமானப்படை தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டதுடன், விமானக் கண்காட்சியின் மீதமுள்ள நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *