சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீ – 20 பேர் பலி, 10 பேர் மாயம்

top-news
FREE WEBSITE AD

பெய்ஜிங், செப். 11 –

சீனாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லைபீரியா நாட்டின் கொடியுடன் இயங்கி வந்த ‘ஓசன் மெலோடி’ என்ற சரக்கு கப்பல் சீன துறைமுகத்திற்கு வந்து நிறுத்தப்பட்டிருந்தது. சம்பவம் நடந்தபோது அந்த கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கப்பலின் ஒரு பகுதியில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியதால் கப்பலில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இந்த கோர சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், மீட்புக் குழுவினரின் உதவியுடன் 12 பேர் பாதுகாப்பாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மீதமுள்ள 10 பேரின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் கப்பலுக்குள் சிக்கியிருக்கலாம் அல்லது கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *