சிப் வடிவமைக்கும் 200 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க இலக்கு – அஸ்வினி வைஷ்ணவ்

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி: இந்தியாவில் செமிகண்டக்டர் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், செமிகான் 2.0 திட்டத்தின் கீழ் சிப் வடிவமைப்பில் ஈடுபடும் சுமார் 200 ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 2021-ஆம் ஆண்டு செமிகான் 1.0 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அந்தத் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடி மதிப்பிலான 12 செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் செமிகான் 2.0 திட்டத்துக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற ‘செமிகான் இந்தியா’ மாநாட்டில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், புதிய திட்டம் வடிவமைப்பு, இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், உற்பத்தி ஆலைகள், நவீன பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகிய 6 முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *