சபா தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு RM 2000 நிவாரணத் தொகை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 20: சண்டக்கான், கம்போங் பஹாகியாவில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளை இழந்த சுமார் 1,000 குடும்பங்களுக்கு சபா அரசாங்கம் RM2,000 சிறப்பு உதவியை வழங்கியுள்ளது.

முதலமைச்சர் ஹஜிஜி நூர் இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பகுதியை ஆய்வு செய்ததோடு, பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்தார்.

ஒவ்வொரு குடும்பத் தலைவருக்கும் மாநில அரசிடமிருந்து RM1,000 சிறப்பு உதவியும், சபா தேசிய நல சங்கத்திடமிருந்து (Yayasan Kebajikan Sabah) மேலும் RM1,000-ம் வழங்கப்பட்டதாக ஹஜிஜி கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்த முழு அறிக்கை ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளைக் கட்டுவதற்காக அப்பகுதியை மறுசீரமைக்க, செலவுகள் அதிகமாக இருந்தாலும், நில மீட்பு உட்பட பல திட்டங்களை தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

தீயில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து சாம்பலானதைத் தொடர்ந்து, 9,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்குமிடம் அளிக்க ஆறு வெளியேற்ற மையங்கள் திறக்கப்பட்டன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *