பேராக்கில் அரசாங்கத்தின் 200 மலிவு வீடுகள்!

top-news

பிப்ரவரி 8,

அரசாங்கத்தின் மலிவு விலை வீடமைப்புத் திட்டம் பேராக்கில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. RPT எனப்படும் Skim Rumah Ibu di Rancangan Perkampungan Tersusun திட்டத்தின் கீழ் RM75,000 முதல் RM278,000 விலையிலான 200 வீடுகள் கட்டப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. RPT திட்டத்தின் வாயிலாக வீடு வாங்க ஆர்வமுள்ளவர்கள் ரொக்கமாகவோ, வீட்டுக் கடனாகவோ அல்லது வாடகைக் கொள்முதல் திட்டமாகவோ செலுத்தத் தேர்வுசெய்யலாம் என பிரதமர் அன்வாரின் செயலாளர் Datuk Seri Shamsul Iskandar தெரிவித்தார்.

மலிவு விலையிலானக் குடியிருப்புப் பகுதிகளை அங்கீகரிக்க தனியார் நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்றும், தற்போது வசதியானத் தலத்தில் அமைக்கப்படும் வீடுகளைத் தனியார் வீடமைப்பு நிறுவனங்கள் முன் வந்தால் மேலும் அதிகப்படியான வசதிகளுடன் வீடுகள் அமைக்கப்படும் என்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முடியும் என Datuk Seri Shamsul Iskandar தெரிவித்தார்.

Kerajaan melancarkan projek perumahan mampu milik di Perak di bawah Skim Rumah Ibu di Rancangan Perkampungan Tersusun (RPT). Sebanyak 200 rumah berharga RM75,000 hingga RM278,000 akan dibina. Pembayaran boleh dibuat secara tunai, pinjaman perumahan atau sewa beli.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *