இந்தியர்களுக்கு 200 புதிய வீடுகள்! செகாம்பூட்டில் வாக்குறுதியை நிறைவேற்றிய HANNAH YEOH!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 16,

தலைநகரின் Bukit Kiara பகுதியில் வசித்து வரும் பெரும்பாலான இந்தியர்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவேன் என்கிற தனது வாக்குறுதியை இப்போது நிறைவேற்றியிருப்பதாகச் செகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டரசு வளாக அமைச்சருமான  Hannah Yeoh தெரிவித்தார். நான் அப்பகுதியில் இருக்கும் மக்களுடன் உரையாடினேன். அவர்கள் இலவசங்களையோ, அத்தியாவசியப் பொருள்களையோ கேட்கவில்லை. குடியிருக்க வீடு தான் கேட்கிறார்கள். 44 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் போராடி வருகிறார்கள் என  Hannah Yeoh தெரிவித்தார். 

2018 முதல் Bukit Kiara பகுதியில் வசித்து வரும் இந்தியர்களிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் தற்போது மடானி அரசு 200 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியைக் கட்டுவதற்கு முன்வந்துள்ளது. சுமார் 5.76 ஏக்கர் பரப்பளவில் அடுக்குமாடிக் குடியிருப்பும், விளையாட்டு மைதானங்களுடன் வாகனம் நிறுத்துமிடமும் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்பாக அது இருக்கும் என Hannah Yeoh தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *