அதிகாலை வெள்ளத்தில் சிக்கிய 20 பேர் மீட்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 4: உலு லங்காட்,  கம்போங் துசுன் நந்திங்கில் இன்று அதிகாலை வெள்ளம் ஏற்பட்டதில் தீயணைப்பு வீரர்கள் 20 பேரை மீட்டனர்.

கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதாக காலை 9.14 மணிக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததாக  சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.

ஒரு அடி ஆழம் வரை தண்ணீர் உயர்ந்ததால், சம்பவ இடத்திலிருந்து 20 பேரை  வெளியேற்றினோம்  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறினார்.

இதற்கிடையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் அதிகரித்ததைத் தொடர்ந்து உலு லங்காட்டில் இன்று இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *