இலங்கையில் அதிர்ச்சி சம்பவம் – 22 புத்த பிட்சுகளிடம் ரூ.100 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்
- Surendran Sumdraraj
- 26 Apr, 2026
கொழும்பு, ஏப். 26-
இலங்கையில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கட்டுநாயக்கே உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 22 புத்த பிட்சுகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையில், ரூ.110 கோடி மதிப்பிலான ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷிஷ்’ போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பிட்சுகள் தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு வந்ததாகவும், அவர்களது பயணப்பைகளில் மறைவு பகுதிகளில் போதைப்பொருட்கள் பதுக்கி கொண்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், ஒவ்வொரு நபரும் 5 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களை எடுத்துச்சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கட்டுநாயக்கே விமான நிலைய வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இந்த சம்பவம், மத உடை அணிந்தவர்களை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் நடப்பது குறித்து பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



