லாரிக்குள் 2,400 லிட்டர் டீசல்! பெருங்கடத்தல் முறியடிப்பு!
- Shan Siva
- 15 Sep, 2026
ஜொகூர்
பாரு,
செப் 15: நேற்று செனாய் (Senai) பகுதியில்
உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், சேமிப்புத்
தொட்டிகள் பொருத்தப்பட்ட லாரி ஒன்றில் 2,400 லிட்டர் டீசல் சட்டவிரோதமாக நிரப்பப்பட்டது
காவல்துறையால் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது
15 'ஃப்ளீட் கார்டுகள்' (fleet cards) பறிமுதல் செய்யப்பட்டன. 30 வயது
மதிக்கத்தக்க இருவர் கைது செய்யப்பட்டனர்.
முறையான
பரிவர்த்தனைகள் போலக் காட்டி, திசைதிருப்பப்பட்ட
டீசல் கொள்முதல்களை மறைப்பதற்கு இந்த 'ஃப்ளீட்
கார்டுகள்'
பயன்படுத்தப்பட்டதாகக்
கூறப்படுகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட
டீசல் விநியோகம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கிடைத்த உளவுத் தகவலின்
அடிப்படையில் 'Ops
Tiris 4.0' என்ற பெயரில் இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டதாக ஜொகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு
அமைச்சகத்தின் இயக்குனர் லில்லிஸ் சஸ்லிண்டா பொனோமோ (Lilis Saslinda Ponomo) தெரிவித்தார்.
சோதனையின்போது, சேமிப்புத் தொட்டிகள் மற்றும்
அதற்கான உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்த அந்த லாரியையும், அதில் நேரடியாக டீசல்
நிரப்பப்பட்டுக் கொண்டிருந்ததையும் அமலாக்க அதிகாரிகள் கண்டறிந்தனர்
என்று அவர் இன்று
வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
பறிமுதல்
செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM60,660
என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு
1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (Control of Supplies Act
1961) பிரிவு
20(1)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இப்பிரிவின் கீழ் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு RM1 மில்லியன் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



