242 சுவை பானங்களில் சர்க்கரை அளவு குறைக்கப்பட்டுள்ளது!
- Shan Siva
- 17 Dec, 2024
கோலாலம்பூர், டிச 17: சுவை பானங்கள் மீதான சர்க்கரை வரி
அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹெல்தியர் சாய்ஸ் லோகோ எனப்படும் HCL முயற்சியின் கீழ்
மலேசிய சந்தையில் குறைந்த சர்க்கரையைக் கொண்டிருக்கும் வகையில் மொத்தம் 242 பான தயாரிப்புகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் வரி
அமல்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2022 ஆம் ஆண்டில் சர்க்கரை-இனிப்பு பான வரியின் மதிப்பீடு
நடத்தப்பட்டபோது இது தெரியவந்ததாக சுகாதார அமைச்சர் Dzulkefly Ahmad தெரிவித்தார்.
சர்க்கரை
பானங்களின் உற்பத்தியாளர்கள் வரி, செலுத்துவதைத்
தவிர்ப்பதற்காக சர்க்கரை அளவைக் குறைக்க தங்கள் தயாரிப்புகளை மறுசீரமைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள்
மற்றும் குறைந்த வருமானம் கொண்ட B40 தரப்பினர் சர்க்கரை
பானங்களின் மிகப்பெரிய நுகர்வோராக இருப்பதால், இந்த
முயற்சியால் மிகவும் பயனடைந்துள்ளனர் என்று அவர்
மேலும் கூறினார்.
சர்க்கரை வரியை
லிட்டருக்கு 90 காசு உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பு சர்க்கரை நுகர்வு எண்ணிக்கையை இன்னும் குறைக்கக்கூடும்
என்று Dzulkefly கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *