249,268 முகநூல் பதிவுகள் நீக்கம்! – தகவல் தொடர்பு அமைச்சு!

top-news

நவம்பர் 28,

மலேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC 249,268 முகநூல் பதிவுகளை நீக்கியுள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார். முகநூல் வாயிலாக மோசடிகளையும் சூதாட்டங்களையும் பரப்பும் பதிவுகள் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

சூதாட்டம் தொடர்பான 172,072 உள்ளடக்கங்களும், மோசடி தொடர்பான 56,136 உள்ளடக்கங்களும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாகவும் இது தேசிய வணிகக் குற்றப்புலனாய்வுத் துறையின் சோதனையிலும் மலேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணைக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக முகநூல் அதிகாரிகளிடம் இது குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் முகநூல் தலைமையகம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பதிவுகளை அரசாங்கம் நீக்குவதற்கு முழு உரிமை உள்ளதாகவும் தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்தார்.

Sebanyak 249,268 kandungan Facebook dipadam atas permintaan MCMC, termasuk 172,072 berkaitan perjudian dalam talian dan 56,136 penipuan. Menteri Komunikasi Fahmi Fadzil menyatakan jenayah tradisional kini semakin beralih ke platform media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *