மலேசியாவில் தொழில்திறனற்ற 24 லட்சம் அந்நியத் தொழிலாளர்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 7-

மலேசியாவில் தொழில்திறனற்ற இருபத்து நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஆறு அதிகாரப்பூர்வத் துறைகளிலும் ஓர் அதிகாரப்பூர்வமற்றத் துறையிலும் வேலை செய்து வருகின்றனர் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாட்டு தொழிலாளர்களுள் பெரும்பாலோர் தயாரிப்புத்துறையில் வேலை செய்து வருகின்றனர். அத்துறையில் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து எழுபத்தோராயிரம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக, கட்டுமானத்துறையில் ஆறு லட்சத்து தொண்ணூற்றெட்டாயிரம் பேரும் சேவைத்துறையில் நான்கு லட்சத்து நாற்பத்தெட்டாயிரம் பேரும் தோட்டத்துறையில் இரண்டு லட்சத்து அறுபதாயிரம் பேரும் விவசாயத்துறையில் ஒரு லட்சத்து எண்பத்து மூன்றாயிரம் பேரும் வீட்டுப் பணியாளர்களாக ஒரு லட்சத்து இரண்டாயிரம் பேரும் வேலை செய்து வருகின்றனர் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *